முகப்பு
தற்போதைய செய்திகள்

கூடுதல் வரதசட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய முன்னாள் ராணுவ வீரர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (38). இவருக்கும் பெரும்புத்தூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் குமார் (40)

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை துன்புறுத்திய அவரது கணவரான முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (38). இவருக்கும் பெரும்புத்தூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் குமார் (40) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின்போது 15 பவுன் நகைகளும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் வரதட்சிணையாக கொடுத்துள்ளார்கள். ராணுவத்தில் பணிபுரிந்து வந்த குமார் 2011-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுபெற்று வந்தவுடன் மனைவியின் நகையை அடமானம் வைத்தாராம். மேலும் 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி மனைவியை குமார் துன்புறுத்தினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து குமாரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →