முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கு: இளைஞர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் மகன் பாண்டி (40). இவரும், இவரது தங்கை வெள்ளைத்தாயும், கான்சாபுரம் பள்ளர் சமுதாய சாவடி முன்பு நின்று கொண்டிருந்துள்ளார்கள்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கான்சாபுரம், காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மருதன் மகன் பாண்டி (40). இவரும், இவரது தங்கை வெள்ளைத்தாயும், கான்சாபுரம் பள்ளர் சமுதாய சாவடி முன்பு நின்று கொண்டிருந்துள்ளார்கள்.

அப்போது அங்கு வந்த கான்சாபுரம், சாவடி தெருவைச் சேர்ந்த ம.வெள்ளையப்பன் (30) என்பவர், வெள்ளைத்தாயிடம் எனது வேலைவாய்ப்பு திட்ட அட்டையை ஏன் கிழித்தாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். இதனை பாண்டி தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் வெள்ளையப்பன், பாண்டியை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் காயமுற்ற அவர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வெள்ளையப்பனைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →