வந்தவாசியில் மாயமான பள்ளி மாணவர்கள் சென்னையில் மீட்பு
வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கார்த்தி(12), சந்தோஷ்(12), சந்துரு(12). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை வீடு
வந்தவாசியில் மாயமான பள்ளி மாணவர்கள் 3 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு போலீஸாரால் மீட்கப்பட்டனர்.
வந்தவாசி சன்னதி மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கார்த்தி(12), சந்தோஷ்(12), சந்துரு(12). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இவர்களது பெற்றோர் புகாரின்பேரில் சக மாணவரான விக்னேஷிடம்(12) வந்தவாசி தெற்கு போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். இதில் கார்த்தி தனது உறவினர்கள் மும்பையில் இருப்பதாகவும், அங்கு ஜாலியாக செல்லலாம் என்றும் சந்தோஷ், சந்துரு ஆகியோரிடம் கூறியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வந்தவாசி தெற்கு போலீஸôர் 3 பேரையும் தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் மாணவர் சந்தோஷ் வெள்ளிக்கிழமை இரவு தனது தாய் மாலதியிடம் போனில் தொடர்பு கொண்டு தான் மும்பை செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருப்பதாக கூறினாராம். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு மாலதி தகவல் அளித்தார். இதன்பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் 3 மாணவர்களையும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீட்டு வந்தவாசிக்கு அழைத்து வந்தனர். பின்னர் சனிக்கிழமை காலை 3 பேரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.