முகப்பு
தற்போதைய செய்திகள்

சோழவரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரகட்டைகள் பறிமுதல்

சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில்  தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சோழவரம் அருகே சோப்பு தயாரிக்கும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில்  தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.  இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படட் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது.  சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கடைகள் பதுக்கி வைத்த நபரை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →