ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு
பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சௌந்தரராஜன் (55). திருமணம் ஆகாதவர். இவர் நீண்ட காலமாக மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவ்வப்போது வலிப்பு நோயால்
பட்டுக்கோட்டையில் ஆற்றில் மூழ்கி வியாழக்கிழமை மாலை முதியவர் உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். சௌந்தரராஜன் (55). திருமணம் ஆகாதவர். இவர் நீண்ட காலமாக மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவ்வப்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பெருமாள்கோயில் தெரு மகாராஜசமுத்திரம் காட்டாற்றில் குளித்துள்ளார் சௌந்தரராஜன். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாராம்.வெள்ளிக்கிழமை காலை ஆற்றோரத்தில் சௌந்தரராஜன் இறந்து கிடக்கும் தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.