முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மனைவியைத் துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மனைவியைத் துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது கணவர் உள்ளிட்ட நால்வர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மகாராஜபுரம், நாயுடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லோகா (28). இவருக்கும் மீனாட்சிபுரம்-புதுப்பட்டி அழகர்சாமி மகன் அஸ்வின் ஸ்ரீராம் என்பவருக்கும் 14.2.13-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 150 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடித்த நாளில் இருந்து கணவர், லோகாவிற்கு சரியான உணவு தரவில்லையாம். மேலும் லோகாவின் 40 பவுன் நகையை அடமானம் வைத்துவிட்டாராம்.கணவர் வேலை செய்யும் புனே விற்கு சென்றும், அங்கும் அஸ்வின் ஸ்ரீராம் தனது மனைவியை துன்புறுத்தினாராம். தந்தை அழகர்சாமி, தாய் கீதா, சகோதரி திவ்யஸ்ரீ ஆகியோரின் பேச்சையும் கேட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாயும் அஸ்வின் ஸ்ரீராம் மனைவியை மிரட்டினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லோகா புகார் செய்தார். போலீஸார் கணவர் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →