முகப்பு
தற்போதைய செய்திகள்

அணை கட்டும் இடங்களை மனைக்கட்டுகளாக மாற்றியது திராவிடக் கட்சிகள்: ஜி.கே.வாசன்

சிவகங்கை தொகுதியில்  மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம்   மக்களவை உறுப்பினரான பிறகுதான் இத்தொகுதி  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  அனைத்து துறை திட்டங்களும் 100 சதம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

தமிழகத்தில் அணை கட்டும் இடங்களை எல்லாம் மனைக்கட்டுகளாக மாற்றியதுதான் திராவிடக் கட்சிகளின்  சாதனை என்றார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.

ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பிரச்சாரத்தில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம்பரத்தை ஆதரித்து மேலும் அவர் பேசியதாவது:

சிவகங்கை தொகுதியில்  மத்திய நிதிஅமைச்சர் ப. சிதம்பரம்   மக்களவை உறுப்பினரான பிறகுதான் இத்தொகுதி  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது.  அனைத்து துறை திட்டங்களும் 100 சதம் மக்களைச் சென்றடைந்துள்ளதால் அனைத்து தரப்பு மக்களின்  வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது.  சிவகங்கை தொகுதியை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் வளர்ச்சி தெரியாது. ஆனால், பிற தொகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இத்தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை உணரமுடியும்.

தமிழ்நாட்டில்  அனைவருக்குகம் கல்வி கிடைக்கவும், அணைக்கட்டுகளை அமைத்து தண்ணீர் பிரச்னைகளை  தீர்க்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்கவும்  முன்னாள் முதல்வர் காமராஜர் அடித்தளம் அமைத்தார்.ஆனால், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள்  அணைக்கட்டுகளுக்கான நிலங்களை மனைக்கட்டுகளாக்கியதும், டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு மக்களை மதுபோதைக்கு அடிமையாக்கியதும்தான் திராவிடக் கட்சிகளின் சாதனை.ஆகவே,நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தொகுதியின் வளர்ச்சிக்கான வாக்கு என்பதை உணர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

மாவட்டத் தலைவர் புஷ்பராஜ்,வட்டாரத் தலைவர்கள் சுந்தரம்,ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →