ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நால்வர் கைது: நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நான்குபேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நால்வர் கைது: நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நான்குபேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நான்குபேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காப்புக் காட்டில் வேட்டையாடும் கும்பல் நடமாடி வருவதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரகர் பாண்டியராஜ் தலைமையில் வனத் துறையினர் வ.புதுப்பட்டி, மருதடி பீட் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (36), பெரிய கருப்பன் (29), கருப்பையா (22), மாரிமுத்து (50) ஆகியோர் வேட்டையாடுவதற்கான ஆயுதங்களுடன் அப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர். இவர்களைக் கைது செய்த வனத்துறையினர் இவர்களிடம் இருந்து 11 நாட்டு வெடி குண்டுகள், 4 அரிவாள்கள், 4 டார்ச் லைட்டுகள் இரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.