அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சாவு.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்கேயன்(7).இந்த சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்கேயன்(7).இந்த சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை கடைவீதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திக்கேயனை மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.
இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக்கேயன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தான்.இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து மோதிச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.