ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: புஷ்ப யாகத்துடன் நிறைவு
ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஜூலை மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஐந்து கெருட சேவை, சயன திருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம்: புஷ்ப யாகத்துடன் நிறைவு
ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஜூலை மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஐந்து கெருட சேவை, சயன திருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் சனிக்கிழமை இரவு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெற்றது.
ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஜூலை மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12-நாட்கள் நடைபெற்ற இந்த உற்சவத்தில் ஐந்து கெருட சேவை, சயன திருக்கோலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது.
12-ம் திருநாளான சனிக்கிழமை காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தி நடைபெற்றது. இரவு வெள்ளிக்கிழமை குறடில் ஸ்ரீஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.