பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
அறந்தாங்கியில் இருந்து ஆலங்குடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது.அப்போது ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசுப்பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
அறந்தாங்கியில் இருந்து ஆலங்குடி நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் சுமார் 70 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து புறப்பட்டது.அப்போது ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது சாலை வளைவில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட்ட போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த ராமாயி (55),ரமாமணி(65), கணேசன்(60), முகமதுபாருக்(35),சாந்தி(35) உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.