முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி அருகே நேரிட்ட சாலை விபத்தில் 2 இளைஞர்கள் சாவு

ஆலங்குடி அருகேயுள்ள  மூக்கம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா மகன் ஆனந்தராஜ் (27).லாரி ஒட்டுநரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  மேலவிடுதியில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:04 AM
பகிர்:

ஆலங்குடி அருகே நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

ஆலங்குடி அருகேயுள்ள  மூக்கம்பட்டியை சேர்ந்தவர் மூக்கையா மகன் ஆனந்தராஜ் (27).லாரி ஒட்டுநரான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு  மேலவிடுதியில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நள்ளிரவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.அப்போது  செம்பட்டிவிடுதி முருகராஜ் நகர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் அவ்வழியாக நடந்து சென்ற  கீழப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ரஞ்சித் (19)  மீது மோதியது.

இதில் நடந்து சென்ற  ரஞ்சித்தும்,மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த ஆனந்தராஜ் ஆகிய இருவரும் அந்த இடத்திலே துடிதுடித்து  இறந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டிவிடுதி காவல் ஆய்வாளர் மதியழகன் சடலங்களை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →