முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாரில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 471 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முடிந்த பின்னர் பார்களில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு அனுமதியின்றி பாரில் வைக்கப்பட்டிருந்த 471 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை முடிந்த பின்னர் பார்களில் அரசு அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், சார்பு ஆய்வாளர் தாமரைவிஷ்ணு ஆகியோர் திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையை ஒட்டியுள்ள பாரில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 10 அட்டை பெட்டிகளில் 471 மது பாட்டில்கள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீஸார் அங்கிருந்த விநாயகமூர்த்தி, மகேந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

ராஜபாளையம்: ராஜபாளையம் ஏ.கே.பர்னிச்சர் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தெய்வீகபாண்டியன் தலைமையில் சென்ற போலீஸார் சனிக்கிழமை அதிகாலை சோதனையிட்டனர். அங்கிருந்த 104 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்த கள்ளடைச்சாமி (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →