கடலூர் அருகே கடல் அரிப்பு: வீடு சேதம், சிமெண்ட் சாலை துண்டிப்பு
கடலூர் துறைமுகம் அருகே கடலோரம் அக்கரைகோரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் உப்பனாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கடல்
கடலூர் முதுநகர் அருகே கடலோரம் உள்ள அக்கரைகோரி கிராமத்தில் கடல்சீற்றத்தினால் வீடு ஒன்று சேதமடைந்தது. சிமெண்ட் சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மீனவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கடலூர் துறைமுகம் அருகே கடலோரம் அக்கரைகோரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம் உப்பனாறு, கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றல் அதிகரித்து கடல்நீர் உட்புகுந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. அப்போது கிராமத்தில் உள்ள பொது கழிப்பறை, 4 வீடுகள் கடல்சீற்றத்தில் கடல்நீர்உட்புகுந்து மண் அரிப்பினால் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அக்கிராமத்திற்கு கடந்த மாதம் சென்று பார்வையிட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் கடலோரத்தில் கருகற்கள் போட வேண்டும், பனை மரம் நட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஜூலை மாதம் மேலும் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஜூலை 12-ம் தேதி கிராமசபையை கூட்டி, மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் ஜூலை 16-ம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
கிராமமக்கள் போராட்டம் அறிவித்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் 150 மீட்டர் தூரத்திற்கு பனை மரங்களை நட்டது. அப்படியிருந்தும் கடல் சீற்றல் அதிகமாகி, கடல்நீர் உட்புகுந்து ஞாயிற்றுக்கிழமை மகேஷ் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. மேலும் சிமெண்ட் சாலை மண் அரிப்பில் இடிந்து துண்டிக்கப்பட்டது. மேலும் இரு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பின்னர் வீடை இழந்த மகேஷ் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்து கடலோர பகுதியில் கடல் சீற்றத்தையும், மண் அரிப்பையும் தடுக்க பெரிய கருங்கற்களை போட வேண்டும், வீடு இழந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.