குடும்பத் தகராறில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பப் பிரச்னையில் குழந்தைகள்ளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:59 AM
தேனி மாவட்டம் கம்பத்தில் குடும்பப் பிரச்னையில் குழந்தைகள்ளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
கம்பமெட்டு காலனியைச் சேர்ந்தராஜேஷ் கண்ணனின் மனைவி பத்மா, குடும்பப் பிரச்னையில் தன் குழந்தைகள் மூவருக்கு விஷம் கொடுத்துள்ளார். கார்த்திகா(10), நாகஜோதி(8), கோகிலப்பிரியா(7) ஆகிய மூவரில் விஷம் அருந்திய இருவர் இறந்து விட்டனர். பத்மாவும் உயிரிழந்துவிட்டார். ஒரு குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.