முகப்பு
தற்போதைய செய்திகள்

பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: டிராக்டர் டிரைவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி-கலிங்கபட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் வைத்தீஸ்வரி (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் டிராக்டர் ஓட்டுவதற்காக நத்தம்பட்டி

தற்போதைய செய்திகள்

பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: டிராக்டர் டிரைவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி-கலிங்கபட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் வைத்தீஸ்வரி (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் டிராக்டர் ஓட்டுவதற்காக நத்தம்பட்டி

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்து மிரட்டியதாக டிராக்டர் டிரைவரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி-கலிங்கபட்டி, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் வைத்தீஸ்வரி (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் டிராக்டர் ஓட்டுவதற்காக நத்தம்பட்டி மாசானம் மகன் தங்கபாண்டி (18) என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதனால் தங்கபாண்டிக்கும் வைத்தீஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாட்டக்குளம், துர்கையம்மன்கோயிலுக்கு சாமி கும்பிட அழைத்துச் சென்று, கோயிலின் பின்புறம் வைத்து, விருப்பத்திற்கு மாறாக வைத்தீஸ்வரியை தங்கபாண்டி பலாத்காரம் செய்தாராம்.செவ்வாய்கிழமை வைத்தீஸ்வரியின் வீட்டில் வைத்து தங்கபாண்டி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாயும் மிரட்டினாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்தீஸ்வரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து வைத்தீஸ்வரியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →