கழிவு பஞ்சு வியாபாரி கொலை வழக்கு: சக வியாபாரி கைது
ராஜபாளையம், வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தலக்குத்தேவர் (48). இவருக்கு லீலா, காசியம்மாள் என்ற இரு மனைவிகள் உண்டு. கழிவுப் பஞ்சு வியாபாரம் செய்து வந்த தலக்குத்தேவர்,
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கழிவு பஞ்சு வியாபாரி வெள்ளிக்கிழமை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பஞ்சு வியாபாரம் செய்யும் சக வியாபாரியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம், வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் தலக்குத்தேவர் (48). இவருக்கு லீலா, காசியம்மாள் என்ற இரு மனைவிகள் உண்டு. கழிவுப் பஞ்சு வியாபாரம் செய்து வந்த தலக்குத்தேவர், பஞ்சுகளை விலை கூடுதல் கொடுத்து வாங்குவாராம். இதனால் உடன் கழிவு பஞ்சு வியாபாரம் செய்து வரும் ராஜபாளையம், சுப்பராஜா மடத்துத் தெருவைச் சேர்ந்த அர்ச்சுனராஜா மகன் ராமராஜ் (37) என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு கொத்தங்குளம்-முத்துலிங்காபுரம் சாலையில் தலக்குத்தேவர் வந்து கொண்டிருந்துள்ளார். இவரைப் பின் தொடர்ந்து வந்த ராமராஜ், மோலயநாயக்கர் காடு அருகே இவர் கொடூரமான முறையில் பல இடங்களில் அரிவாளால் வெட்டி தலக்குத்தேவரை கொலை செய்துள்ளார்.
Advertisement
Advertisement
இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு, ராமராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் முன்னிலைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.