ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமலை நாயக்கர் சிலையை நிறுவ தமிழக அரசுக்கு கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு முத்திரைச் சின்னமாக விளங்கும் கோபுரத்தைக் கட்டிய திருமலை நாயக்கரின் உருவச் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுவ தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமலை நாயக்கர் சிலையை நிறுவ தமிழக அரசுக்கு கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு முத்திரைச் சின்னமாக விளங்கும் கோபுரத்தைக் கட்டிய திருமலை நாயக்கரின் உருவச் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுவ தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு முத்திரைச் சின்னமாக விளங்கும் கோபுரத்தைக் கட்டிய திருமலை நாயக்கரின் உருவச் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுவ தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
மாமன்னர் திருமலை நாயக்கர்-வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்புப் பேரவையின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்டத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஏ.பிரேம் (எ) நவநீதகிருஷ்ணன், நிர்வாகக் குழு உறுப்பினர் பி.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேசுகையில் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசுவைர் 47.4 சதவீதம் பேர் உள்ளனர்.
ஆனால் அரசியல்வாதிகள் தெலுங்கு மக்களை ஒருபொருட்டாக மதிப்பதில்லை. விஜயநகரப் பேரரசின் வழியில் ஆட்சி செய்து வந்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு வளங்களை ஆந்திராவிற்கு சிறிதும் கொண்டு செல்லவில்லை. தமிழகத்தில் மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தஞ்சை, செஞ்சி, திருச்சி, பெரம்பலூர், சென்னை, கோவை, வேலூர் முதலிய முக்கிய நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு சிறந்த முறையில் ஆட்சி செய்தார்கள். இன்றும் அவர்கள் கட்டிய கோவில்கள், வெட்டிய ஏராளமான ஏரிகள், குளங்கள், கோட்டைகள், கோபுரங்கள், மாளிகைகள், மண்டபங்கள், சாலைகள், தேர்கள் என பல சிறந்த சின்னங்கள் அவர்கள் நினைவாக நம் தமிழகத்தில் இன்றும் வெளிநாட்டவர் உள்பட அனைவரும் பாராட்டும் வகையில் அழகுபடச் செய்து அவர்கள் ஆட்சி புரிந்த நகரங்களில் விட்டுச் சென்றுள்ளார்கள். பல அரசு அலுவலகங்கள் நாயக்கர் காலக் கட்டடங்களில் இன்றும் இயங்குகின்றன.
சிலவற்றை நினைவுச் சின்னங்களாக மக்கள் கண்டு களிக்கின்றனர்.தமிழகத்தில் பெரும்பான்மையாக தெலுங்கு மொழி பேசுவோர் இருந்தாலும், ஒற்றுமையில்லாமல் சிதறுண்டு இருப்பதால் ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை. சிறுபான்மையாக உள்ளவர்கள் ஆதிக்கமே அரசியலில் அதிகம் உள்ளது. ஆகவே எல்லா நாயக்கர் இனத்தையும் ஒன்று சேர்த்து ஓரணியில் ஒற்றுமையாக இருந்து தெலுங்கின மக்களின் முழு கூட்டத்தை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டவும், விஜயநகரப் பேரரசுகளின் அறக்கொடைகள் பல தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளதையும், சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதையும், தனியார் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு பாதுகாப்பதுமே தற்போதைய முதல் கடமை என்றார் அவர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:தஞ்சை மாமன்னன் பிறந்தநாளை சதயத் திருவிழாவாக எல்லோரும் கொண்டாடுவதைப் போன்று, திருமலை நாயக்கரின் பிறந்த நாளை தைப்பூசத் திருவிழாவாக கொண்டாட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் கோபுரத்தைக் கட்டிய திருமலை நாயக்கருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு, உருவச் சிலை அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சிலையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமலை நாயக்கர் மகாலுக்கு கிழக்கே உள்ள காலி இடத்தில் வைப்பதற்கு புதுதில்லியில் உள்ள மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையிடம் அரசு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். சுதந்திரப் போராட்டத்திற்கு முதலில் வித்திட்ட கட்டபொம்மனுக்கு சென்னையில் உருவச் சிலை அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சென்னையில் சிலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பது.விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுத் தொகுதி 1 மற்றும் 2 வெளியிட்டு அதில் சிறுசிறு கோவில்கள் குறித்த கல்வெட்டு குறிப்புகள் யாவும் வெளிவந்துள்ளது.
ஆனால் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீஆண்டாள் கோவில் கல்வெட்டுகள் யாவும் படியெடுத்தும் அவற்றை இதுவரை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்யவில்லை. அதை விரைவில் பதிப்பித்து தமிழக தொல்லியல் துறை வெளியிட வேண்டும்.தமிழ்நாட்டில் நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு மொழி சிறுபான்மையினர் என்ற அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.