விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிசு பராமரிப்பு பிரிவில் கண்காணிப்பு கேமரா
விருதுநகர் அரசு மருத்துவனையில் சிசு பராமரிப்பு பிரிவில் உறவினர்கள் குழந்தைகளின் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு கேமரா மூலம் தொலைக்காட்சியில்
விருதுநகர் அரசு மருத்துவனையில் சிசு பராமரிப்பு பிரிவில் உறவினர்கள் குழந்தைகளின் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில் கண்காணிப்பு கேமரா மூலம் தொலைக்காட்சியில் பார்க்கும் வசதியை உடனே ஏற்படுத்த அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து பொறுத்தும் நடைபெறுவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
தர்மபுரி அரசு மருத்துவமனை சிசு பராமரிப்பு பிரிவில் குழந்தைகள் உயிரிழந்தை தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சிசு பராமரிப்பு பிரிவு நோய்தொற்று இல்லாமல் பராமரிக்க வேண்டும். மேலும், உறவினர்கள் குழந்தைகளின் நிலைமையை அறிந்து கொள்ளும் வகையில் பலர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அப்போது, குழந்தைகளுக்கு தொற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே இது போன்றவைகளை தடுக்கும் வகையிலும், குழந்தை திருட்டுக்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும் நவீன மொபைல் கேமரா மூலம் தொலைக்காட்சியில் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக ரூ.1.50 லட்சம் ஒதுக்கப்பட்டு பொறுத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்த்தொற்று தவிர்க்கப்படுகிறது. அதேசமயத்தில், குழந்தைகளின் நிலைமையை தொலைக்காட்சி பெட்டி மூலம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அறிந்து கொள்ளவதற்காகவே நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன் தெரிவித்தார்.
Advertisement