முகப்பு
தற்போதைய செய்திகள்

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயியில் சொக்கப்பானை மரம் விழுந்து வாலிபர் சாவு

  திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் சொக்கப்பானை மரம் விழுந்ததில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:36 AM
பகிர்:

  திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் சொக்கப்பானை மரம் விழுந்ததில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    சமயபுரம் இனாம்சமயபுரம் பகுதியினைச் சேர்ந்த ராமர் மகன் பசுபதி (19). வெள்ளிக்கிழமை இரவு சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபமான சொக்கப்பானை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. பனஒலை எரிய வைப்பதற்காக பனமரத்தினை நடுவது வழக்கம். அதே போல் நேற்றும் பனஒலை எரிந்து பின்பு பனமரத்தினை வெட்டி கீழே விழ செய்த போது சமயபுரம் இனாம்சமயபுரம் பகுதியினைச் சேர்ந்த ராமர் மகன் பசுபதி (19) மீது விழுந்தது.

    இதில் பசுபதி உடல் நசுங்கிய நிலையில் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிசோதனை செய்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். பசுபதி தாய் அங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் எஸ்.ஐ யோகரத்தினர் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →