சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6 கோடி 34 லட்சத்திற்கு சமரச தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் சிவில், ஜீவனாம்சம், மோட்டார் வாகனம், குற்றவியல் உள்ளிட்ட வழக்குகள் மற்றும் இந்தியன்வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பிஎஸ்என்எல்
சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு இலவச சட்ட உதவி மையம் சார்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்தில் சிவில், ஜீவனாம்சம், மோட்டார் வாகனம், குற்றவியல் உள்ளிட்ட வழக்குகள் மற்றும் இந்தியன்வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கி, பிஎஸ்என்எல் ஆகியவற்றின் வழக்குகள் சுமார் 3 ஆயிரம் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டு 6 கோடியே 33 லட்சத்து 84ஆயிரத்து 153 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விழாவிற்கு வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சார்புநீதிபதியுமான ஏ.ராதிகா தலைமை வகித்துப் பேசினார். கூடுதல் மாவட்ட நீதிபதி கிங்கிலி கிருஸ்டோபர் சிறப்புரையாற்றினார். குற்றவியல் நடுவர்எண்-1 நீதிமன்ற நீதிபதி சி.சுரேஷ்குமார், குற்றவாயில் நடுவர் எண்-2 நீதிமன்ற நீதிபதி பி.மருதுபாண்டி, வழக்குரைஞர் சங்கங்களின் தலைவர்கள்அன்பழகன், பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர்கள் அஸ்வத்துராமன், தேவதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்