அண்ணாமலைப் பல்கலை.பேராசிரியர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல்: அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
சிதம்பரத்தில் இடம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு மற்றும் கார் மற்றும் பொருள்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து நகர
சிதம்பரத்தில் இடம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் வீடு மற்றும் கார் மற்றும் பொருள்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து நகர போலீஸார் அதிமுக நகரச் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழங்குப் பதிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் கனகசபைநகர் 2வது மெயின்ரோட்டில் வசிப்பவர் பூ.ராஜமன்னன் (52).இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல இயற்பியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பூ.ராஜமன்னன் வீட்டிற்கு சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த10-க்கும் மேற்பட்டோர் கும்பல் வீட்டு வாயிலில் இருந்த நாற்காலி,பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தனர். பின்னர் உருட்டுக்கட்டையால் ஜன்னல் கதவுகள் மற்றும் பொருள்களை உடைத்தனர். வெளியே நிறுத்தப்பட்டிருந்தரூ.1 கோடி மதிப்பிலான ஆர்டி காரை கல்லை தூக்கி போட்டும், உருட்டை கட்டையால் தாக்கி உடைத்து சேதப்படுத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர்அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில் பேராசிரியர் பூ.ராஜமன்னனுக்கும், நகரச் செயலாளர் கே.சுந்தருக்கும் இடம் வாங்குவது சம்பந்தமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தோப்புசுந்தர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சனிக்கிழமை இரவு பேராசிரியர் வீட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திவிட்டு, ஜன்னல் வழியாக மண்ணெண்ணெயை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் பூ.ராஜமன்னன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார்அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், கணேசன், சந்திரமோகன்,ராஜா, பஞ்சர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.