ஆராய்ச்சித்துறையில் தேசிய அளவில் அண்ணாமலைப் பல்கலை 7வது இடம்: நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா
ஆராய்ச்சித்துறையில் தேசிய அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 7-வது பல்கலைக்கழகமாக திகழ்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை முதலிடம் வகிக்கிறது என அண்ணாமலைப் பல்கலைக்கழக
ஆராய்ச்சித்துறையில் தேசிய அளவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 7-வது பல்கலைக்கழகமாக திகழ்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை முதலிடம் வகிக்கிறது என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழக அரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு முதன்முதலாக 2000 ஆண்டில் நாக் கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. 2007-ல் இரண்டாவது முறையாக நாக் கமிட்டி ஆய்வு மேற்கொண்டு B++ கிரேடு அந்தஸ்தை வழங்கியது. தற்போது 2014-ம் ஆண்டில் வருகை தந்தை நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு A கிரேடு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பும், உயர்கல்வி வாய்ப்புகளும் பெருகும். ஏ கிரேடு அங்கீகாரம் பெற்றதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கும். நிதிஆதாரம் பெருகும் வாய்ப்புகள் உள்ளன. தேசிய அளவில் உள்ள 700 பல்கலைக்கழகங்களில், ஏ கிரேடு அந்தஸ்தில் 42வது இடத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்தார்.
பேட்டியின் போது பதிவாளர் என்.பஞ்சநதம், பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், பொறியியல் புல முதல்வர் டி.வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.