மணல்காட்டானூரில் கும்பாபிஷேகம்
இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2-ம் தேதி கால்கோள் விழாவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 10-ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே மணல்காட்டானூரில் உள்ள ராமர், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2-ம் தேதி கால்கோள் விழாவுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 10-ம் தேதி விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை, கும்பம் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின்பு ராமர், காளியம்மன் கோயில் விமானங்களில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ராமர், சீதை, காளியம்மன், லட்சுமனர், அனுமார், கருப்பசாமி, பைரவர் மூர்த்திகளுக்கும் மகாஅபிஷேகம் நடத்தப்பட்டது. நண்பகலில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது. வியாழக்கிழமை (பிப்.13) முதல் 25-3-2014 வரை மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. நிறைவு நாளில் கும்ப பூஜை, யாகசாலை பூஜை, 108 சங்காபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.