முகப்பு
தற்போதைய செய்திகள்

பாளையங்கோட்டையில் கிராமிய  அஞ்சல் ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு 2-வது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு 2-வது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜி.டி.எஸ்.களுக்கு இலாகா ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும். 50 சதவிகித பஞ்சப்படியை சம்பளத்துடன் இணைத்திட வேண்டும். வெளியாட்களுக்கு வழங்கும் 25 சதவிகித காலியிடங்களை பணிமூத்த ஜி.டி.எஸ்.களைக் கொண்டு நிரப்ப வேண்டும். பகுதிநேர, கேசுவல் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட சம்பள விகிதத்தை 1-1-2006 முதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். இதையடுத்து 2-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் அமைப்புச் செயலர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.காலபெருமாள் முன்னிலை வகித்தார். கோட்டப் பொருளாளர் வி.முத்தையா, கணபதி, அப்துல்சமது, நம்பி, முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஜெயராம், செல்வம், பாலசிங், ஐயப்பன், அமீர்,திருமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →