தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மர்மமான முறையில் 12 ஆடுகள் சாவு

விருதுநகர் அருகே உள்ளது எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் காட்டுப்பகுதிக்கு சென்றார்களாம்.அப்போது, லோகமணி மற்றும் முனியாண்டி ஆகியோர் காடுகளில் 4 இடங்களில் கண்கள்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மர்ம நபர்கள் வைத்த கடுமையான விஷம் கலந்த நீரை குடித்த 12 ஆடுகள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

விருதுநகர் அருகே உள்ளது எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் காட்டுப்பகுதிக்கு சென்றார்களாம்.அப்போது, லோகமணி மற்றும் முனியாண்டி ஆகியோர் காடுகளில் 4 இடங்களில் கண்கள் பிதுங்கி, வயிறு வீங்கிய நிலையில் 12-ஆடுகள்  உயிரிழந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, கிராம மக்கள் சென்று பார்த்தனர். இந்த ஆடுகள் விவசாயிகள் சின்னக்காளி உள்ளிட்ட 4 பேருக்கு சொந்தமான ஆடுகள் ஆகும். இந்த ஆடுகள் விருதுநகர்-அழகாபுரி சாலையை சுற்றி ஆள்கள் இல்லாமலே தன்னால் மேய்ந்து வீடு திருபுமாம்.

ஆனால், இந்நிலையில் ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் கிராமத்திற்குள் தேடியுள்ளனர். இந்நிலையில் ஓடைப்பகுதி, சாலையோர பகுதிகளில் மேய்ந்து கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் கொடும் விஷம் கலந்த நீரை ஆடுகளுக்கு வைத்துள்ளனர். அதைக் குடித்த ஆடுகள் அப்படியே உயிரிழந்திருக்கிறது. இது குறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இக்கிராமத்தில் ஆடுகள் அதிகமாக இருக்கிறது. இதனால், இச்சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும்ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.55 லட்சம் வாக்காளா்கள்

இருவேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT