நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை: அணைகளுக்கு நீர்வரத்து இல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய மழை பெய்த போதிலும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. புதன்கிழமையும் மேக மூட்டமாக குளு குளுவென இருந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய மழை பெய்த போதிலும் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. புதன்கிழமையும் மேக மூட்டமாக குளு குளுவென இருந்தது.
நிகழ் பருவத்தில் வடகிழக்கு பருவ மழை 12.6 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது. மழை குறைந்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது. மழை இல்லாததால் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். பகலிலும் பனிப்பொழிவு இருந்தது.
இதனிடையே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்தே இம்மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்தது. விடிய விடிய மழை நீடித்த போதிலும் அணைகளுக்கு நீர்பிடிப்பு பகுதியில் இருந்து பெரிய அளவில் நீர்வரத்து இல்லை.
புதன்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்: திருநெல்வேலியில் 16 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 18.4 மி.மீ மழையும், தென்காசியில் 3.1 மி.மீ மழையும், செங்கோட்டையில் 1 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 2.6 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 22 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 18.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 16 மி.மீ மழையும் பெய்துள்ளது.
அணைகளில் பதிவான மழை: பாபநாசம் அணையில் 20 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 32 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 36.4 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 4.2 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 4.5 மி.மீ மழையும், வடக்குபச்சையாறு அணையில் 16.4 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 12 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.
அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 82.85 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.50 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீ்ர்மட்டம் 70.17 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 51.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 46.75 அடியாகவும்,
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 45.37 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 34.76 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 3 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 9.84 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 12.50 அடியாகவும் இருந்தது.
அணைகளின் நீர்வரத்து: விநாடிக்கு பாபநாசம் அணைக்கு 329.35 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 73 கனஅடியும், கடனாநதி அணைக்கு 19.03 கனஅடியும், ராமநதி அணைக்கு 25 கனஅடியும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளுக்கு தலா 5
கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பாபநாசம் அணையில் இருந்து 400 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 430 கனஅடியும், கடனாநதி அணையில் 45 கனஅடியும், ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தலா 25 கனஅடியும், குண்டாறு அணையில் இருந்து 10 கனஅடியும், கொடுமுடியாறு அணையில் இருந்து 8 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.