முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்கள்: கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் ஆய்வு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேர்களை உறுதிதன்மை குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது பச்சைய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தினரால் ரூ.75 லட்சம் செலவில் ஸ்ரீசிவகாமிஅம்மன் தேர் பழுது நீக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு புதிய தேர் ஞாயிற்றுக்கிழமை வெள்ளோட்டம் விடப்பட்டது. ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு தேரோட்டத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்களின் உறுதித்தன்மை குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தெரிவிக்கையில் பொதுப்பணித்துறை தொழில்நுட்ப பிரிவினர் மூலம் ஆய்வு செய்ததில் ஸ்ரீநடராஜப்பெருமான் தேர் தற்காலிகமாக பாதுகாப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தேர் நிறுத்தி செல்வது குறித்தும், தரிசன விழா குறித்தும் சிதம்பரம் உதவிஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாதல் அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பின்னர் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தெரிவித்தது: பழுதுற்ற ஸ்ரீநடராஜப் பெருமான் தேரின் 4 மூளைகளிலும் அடித்தளத்திலிருந்து மேல்தளம் வரை 25 எம்எம் இரும்பு கம்பி பொருத்தப்பட்டு வெல்டு செய்யப்பட்டு உறுதிதன்மை பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேரினை சுற்றி இரும்பு ரோப் போடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினரால் உறுதித்தன்மை சான்று வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆனித்திருமஞ்சன தேரோட்டத்தின் போது மண்டகப்படிக்காக வீதிகளில் நிறுத்தி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தரிசனத்தை மதியம் 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என எம்.அரவிந்த் தெரிவித்தார்.

ஆட்சியர் ஆய்வின் போது வட்டாட்சியர் எம்.விஜயா, பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஆர்.பாஸ்கர தீட்சிதர், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் சா.வைத்தியநாதன், உதவிப்பொறியாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.