முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் மறியல்: தமிழ்புலிகள் அமைப்பினர் 96 பேர் கைது

ஒண்டிவீரன் மணிமண்டப வளாகத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

ஒண்டிவீரன் மணிமண்டப வளாகத்தில் குதிரையுடன் கூடிய முழு உருவச் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பினர் 96 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் நீதிமன்றம் எதிரில் ஒண்டி வீரனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டபம் அமைந்துள்ள வளாகத்தில் ஒண்டிவீரனுக்கு குதிரையுடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராடடம் நடைபெற்றது.

 திருநெல்வேலி திருச்செந்தூர் பிரதான சாலையில் நீதிமன்றம் எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த தமிழ்புலிகள் அமைப்பினர் மணிமண்டபம் அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

மறியலில், பங்கேற்ற அமைப்பின் மாநில பொதுச்செயலர் நாகை திருவள்ளுவன் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் சிறுத்தை செல்வம், முகில் அரசு, விடியல் வீரபெருமாள், கலைவேந்தன், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் தமிழ்மாறன், தமிழ்செல்வன், இளமாறன், தமிழரசு, தமிழ்வளவன், தனியரசு, அறிவரசு, மானூர்ராஜா உள்ளிட்ட 96 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →