முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த சமாஜ்வாதி கட்சி கோரிக்கை

தமிழக மக்கள் நலன் கருதி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக சமாஜ்வாதி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

தமிழக மக்கள் நலன் கருதி, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக சமாஜ்வாதி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் தமிழக முதல்வருக்கு ஜெயலலிதாவிற்கு அனுப்பியுள்ள கடித விபரம்: தமிழகத்தில் தங்களது தலைமையிலான ஆட்சி சிறப்பான மக்கள் நலன் சார்ந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறீர்கள். தமிழகத்தில் அனைத்து தெருக்களிலும், டாஸ்மாக் கடைகளை திறந்து மடு விற்பனையை அதிகமாக ஊக்கப்படுத்தி வருகின்றீர்கள். மது குடிப்பதால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதாரத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டு அழிவை நோக்கியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதுவின் கொடுமையினால் கணவரை இழந்து விதவைகளாக கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் தினம், தினம் மதுக்குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், விபத்துகளில் ஏராளமானோர்கள் இறந்து வருவது தொடருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் பெற்றோரை இழந்து லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுவிற்பனையை ஊக்குவிப்பதால் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கடிதத்தில் இளங்கோயாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.