இலவச ஆடுகள் வழங்குவதில் முறைகேடு: வட்டாட்சியர் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூர் கிராமத்தில் தமிழகஅரசின் விலையில்லா ஆடு வழங்குவது குறித்து பயனாளிகள் தேர்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் தகுதியான
காட்டுமன்னார்கோயில் அருகே இலவச ஆடுகள் வழங்க கணக்கெடுத்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர் வீட்டை பொதுமக்கள் ஞாயிற்றக்கிழமை காலை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மானியம் ஆடூர் கிராமத்தில் தமிழகஅரசின் விலையில்லா ஆடு வழங்குவது குறித்து பயனாளிகள் தேர்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் ஒரு பிரிவினர் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் வெங்கடாசலம் வசித்து வரும் குடியிருப்பிற்கு சென்று முற்றுகையிட்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சந்தையில் ஆடுகள் வாங்க செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும், மீண்டும் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆடுகள் வாங்கக் கூடாது என உத்தரவிட்டு, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.