முதியோர் உதவித்தொகை வழங்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம்: திமுக முன்னாள் கவுன்சிலர் அறிவிப்பு
சிதம்பரம் வட்டத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பயணாளிகளுக்கு மீண்டும் உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்காவிடில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மேலவீதி அண்ணாசிலை அருகே
சிதம்பரம் வட்டத்தில் நிறுத்தப்பட்ட 2 ஆயிரம் பயணாளிகளுக்கு மீண்டும் உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்காவிடில் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மேலவீதி அண்ணாசிலை அருகே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினர் சிவா.கண்ணதாசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் வடத்தில் கடந்த 6 மாதமாக முதியோர் உதவித்தொகை சரியாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும் எந்தவித முன் அறிவிப்பு இன்றியும், முறையான விசாரணையும் இன்றியும் 2 ஆயிரம் பயனாளிகளின் முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மா திட்டம் மூலம் கடந்த 6 மாதமாக சுமார் 4 ஆயிரம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டு இதுநாள் வரை பணம் வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை கேட்டு சுமார் 3 ஆயிரம் முதியவர்கள் விண்ணப்பம் அளித்து உள்ளனர். எனவே ரத்து செய்யப்பட்ட 2 ஆயிரம் பயனாளிகளுக்கு மீண்டும் உடனடியாக முதியோர் உதவித்தொகை வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் சிவா.கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.