சிதம்பரம் அருகே இளம்பெண் சாவில் சந்தேகம்: சடலம் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை
சிதம்பரம் அருகே வேளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் கமலா (23) ஆகிய இருவரும் கடந்த 3 வருடம் முன்பு காதலித்து திருமணம் செய்து
சிதம்பரம் அருகே இளம்பெண் சாவில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது தந்தை புகாரின் பேரில் புதைக்கப்பட்ட சடலம் உதவிஆட்சியர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சிதம்பரம் அருகே வேளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜாய்ஸ் கமலா (23) ஆகிய இருவரும் கடந்த 3 வருடம் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூலை 1-ம் தேதி வீட்டின் அருகே உள்ள மாட்டுக் கொட்டகையில் ஜாய்ஸ் கமலா தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். பின்னர் இருதரப்பினரும் சேர்ந்து கிருஸ்துவ முறைப்படி உடலை பெட்டியில் வைத்து புதைத்துவிட்டனர். இந்நிலையில் ஜாய்ஸ் கமலாவின் தந்தை மாதவன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுக்கா போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் செவ்வாய்க்கிழமை புதைக்கப்பட்ட உடலை உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி தடயஅறிவியல் துறை மற்றும் ரத்தம் சார்ந்து துறை மருத்துவர்கள் கீதாஞ்சலி, ஆர்த்தி ஆகியோர் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.