முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் திருப்பாற்கடல் தீர்த்தகுள திருப்பணி தொடக்கம்!

சிதம்பரம் வேங்கான்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்த குளங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளமம் திருப்பணி புதன்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

சிதம்பரம் வேங்கான்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீநடராஜர் கோயில் தீர்த்த குளங்களில் ஒன்றான திருப்பாற்கடல் தீர்த்தகுளமம் திருப்பணி புதன்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.

சிதம்பரம் வேங்கான்தெரு பர்ணாசாலையில் உபமன்யு என்ற முனிவருக்காக ஸ்ரீநடராஜப் பெருமான் உருவாக்கியது திருப்பாற்கடல் குளம் என வரலாறு கூறுகிறது. இந்த திருப்பாற்கடல் தீர்த்தகுளம் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு தூர்ந்து போய் இருந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் இந்த ஆண்டு மீட்கப்பட்ட பகுதி மட்டும் சுத்தம் செய்யப்பட்டு நீர்விடப்பட்டு ஸ்ரீசிவகாமசுந்தரி சமே ஸ்ரீமந் நடராஜப் பெருமானின் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடத்தப்பட்டது.

வேங்கான்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருப்பாற்கடல் தீர்த்த குளம் மொத்த 6647 சதுர மீட்டராகும். மேலும் குளத்தில் அருகாமையில் ஆத்மநாதர்கோயில், குருநமச்சிவாயர் கோயில் உள்ளது. தற்போது கோயில் குளம் முற்றிலுமாக இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரால் தூர்வாரும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் தீர்த்தகுளத்தின் படிக்கட்டுகளை சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்து, நீர் வரும் பாதையை சீர் செய்து, சுவாமி சுற்றி வருமாறு பாதை அமைத்து திருப்பணி செய்யப்படவுள்ளது. மேற்கண்ட திருப்பணி புதன்கிழமை தொடங்கப்பட்டதை முன்னிட்டு சிறப்புபூஜை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. திருப்பணி தொடக்கத்திற்கான பூமிபூஜையை டி.எம்.தியாகப்பா தீட்சிதர் நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பணிக்குழுத் தலைவரும், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவருமான மு.செங்குட்டுவன், அடைக்கப்பன் செட்டியார், நாச்சியப்பன், திருஞானசம்பந்தம், ஆத்மநாதர் கோயில் டிரஸ்ட் பசவராஜ், சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.