முகப்பு
தற்போதைய செய்திகள்

சுய நிதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விலையில்லா மடிக்கணினி கேட்டு முற்றுகை: சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர்.அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:51 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர்.அரசின் விலையில்லா மடிக்கணினியை சுய நிதி பாடப் பிரிவில் படித்த மாணவ மாணவியருக்கும் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில், வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி இது அரசின் கொள்கை முடிவு. உங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாகக் கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சி.எம்.எஸ்.மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுய நிதி பாடப் பிரிவில் படித்த சுமார் 300 மாணவ மாணவியர் மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு திடீரென தங்களுக்கும் அரசின் விலையில்லா மடிக்கணினி வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களை போலீஸார் அழைத்து மாவட்டக் கல்வி அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், மாவட்டக் கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ் ஆகியோர் அரசின் கொள்கை முடிவு குறித்து விளக்கினர்.

இது மாவட்ட நிர்வாகமோ, பள்ளியோ எடுத்துள்ள முடிவு இல்லை. உங்களது கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக கொடுங்கள். அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புவோம் என்று கூறினர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் மாணவ மாணவியர் தங்களது கோரி்க்கையை எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →