மனைவியை கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது வழக்கு
தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்(54), இவரது மனைவி மாலைச்செல்வி(42). இவருக்கும் குடும்ப பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயராஜ்
தேனியில் சனிக்கிழமை குடும்ப பிரச்னையில் மனைவியை கொலை செய்ய முயன்றதாக கணவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ்(54), இவரது மனைவி மாலைச்செல்வி(42). இவருக்கும் குடும்ப பிரச்னையில் கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயராஜ் மாலைச்செல்வியுடன் வீட்டில் தகராறு செய்து, அவரை அரிவாள்மனையால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மலைச்செல்வி தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜெயராஜ், மாலைச்செல்வி ஆகியோர் மகன் சரவணவிக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், மனைவியை கொலை செய்ய முயன்றதாக ஜெயராஜ் மீது தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Advertisement