கேரள கழிவுகளை எரிக்கும் போது தீ விபத்து: அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களுக்கு மயக்கம்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெள்ளிக்கிழமை கேரளா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கழிவு பிளாஸ்டிக்குகளை எரித்த போது தீ பயங்கரமாக கரும்புகையுடன் அருகில் பரவியது. இதனை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவருக்கு இந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.
தற்போதைய செய்திகள்கேரள கழிவுகளை எரிக்கும் போது தீ விபத்து: அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களுக்கு மயக்கம்
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெள்ளிக்கிழமை கேரளா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கழிவு பிளாஸ்டிக்குகளை எரித்த போது தீ பயங்கரமாக கரும்புகையுடன் அருகில் பரவியது. இதனை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவருக்கு இந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வெள்ளிக்கிழமை கேரளா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட கழிவு பிளாஸ்டிக்குகளை எரித்த போது தீ பயங்கரமாக கரும்புகையுடன் அருகில் பரவியது. இதனை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்களில் இருவருக்கு இந்த புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், நகராட்சி மயானத்திற்கு பின்புறத்தில் கரும்புகையுடன் பயங்கரமாக தீ எரிந்து கொண்டிருந்தது.
இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுத்தனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். ஆனால் கரும்புகைக்குகள் அவர்களால் சென்று தீயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கரும்புகையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து தீயணைப்புப் படையினர் கூறியதாவது:
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு எதிரே நகராட்சி மயானத்தையொட்டி, மாதா பிளாஸ்டிக் என்ற நிறுவனத்தை வளவன் மனைவி சகுந்தலா என்பவரும், வி.எல்.வி. டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை, திருப்பதி மகன் விவேகானந்தன் என்பவரும் நடத்தி வருகிறார்கள்.
கேரளா மாநில அரசு பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவு பிளாஸ்டிக்குகளை எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இவர்கள் லாரிகளுக்கு வாடகை மட்டும் கொடுத்து கேரளாவிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து வருகிறார்கள். இங்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகளை பகலில் எரிக்கின்றனர்.
ஒரு லாரி கழிவுகளை எரித்ததிலிருந்து வரும் கழிவுப் பொருள் மூலம் இவர்களுக்கு சுமார் ரூ.10 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வரை கிடைக்கிறது. இதிலிருந்து வரும் விஷப் புகையை சுவாசிப்பவர்களுக்கு உடல் ரீதியாக கடுமையான பாதிப்பு ஏற்படும்.
பொதுமக்களுக்கு கடும் தீங்கை விளைவிக்கும் இந்த தொழில் செய்து வருபவர்கள் நகராட்சிக்கு வரி கட்டுவதாயும், தாங்கள் இந்தத் தொழிலை தொடருவதாயும் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்தும் இதுபோன்று பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தொழில் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நகராட்சி நிர்வாகத்திற்கு தீயணைப்புத் துறை சார்பில் கடிதம் எழுத இருப்பதாயும் கூறினர்.
இது குறித்த நகராட்சி ஆணையாளர் பழனிவேலிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:
இது கடுமையாக பொதுமக்களைப் பாதிக்கும். உடனடியாக சுகாதார ஆய்வாளர்களை அனுப்பி பார்ப்பதாகக் கூறினார்.
பொதுமக்கள் கோரிக்கை:
இப் பகுதியில் தொடர்ந்து கேரள மாநிலத்தில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நகராட்சி நிர்வாகம் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.