முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

தேனியில் திங்கள்கிழமை அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்து தங்கச்

Updated On : 21 ஜூலை, 2014 at 5:45 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:26 AM

தேனியில் திங்கள்கிழமை அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்து தங்கச் சங்கலியை பறித்துச் சென்றுவிóடதாகதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தேனி, கே.ஆர்.ஆர்.நகர் 4-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மனைவி செல்வராணி(55). இவர், அதிகாலை நடை பயிற்சிக்குச் சென்று விட்டு பால் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்ப வந்து கொண்டிருந்தாராம். அப்பாúது, இரு சக்கர வாகனத்தில் வந்த 20 வயது மதிக்கத் தக்க 2 பேர், கே.ஆர்.ஆர்.நகர் 3-வது குறுக்குத் தெரு சந்திப்பு பகுதியில் செல்வராணியை வழிமறித்து, அவர் அணிந்திருந்த 4 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்று விட்டனராம்.

    இது குறித்து செல்வராணி அளித்த புகாரின் மீது, தேனி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.