முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தற்போதைய செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா தேரோட்டம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா இம்மாதம் 22-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் இந்த பெருவிழாவில், 5-ம் திருநாளான 26-ம் தேதி (சனிக்கிழமை) ஐந்து கருடசேவை நடைபெற்றது. அப்போது ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகியோர் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வர் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

7-ம் திருநாளான 28-ம் தேதி இரவு கிருஷ்ணன்கோவிலில் சயன சேவை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

9-ம் திருநாளான 30-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.05 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தொடங்கியது.

முன்னதாக மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசாமி திருக்கோவிலிலிருந்து பிரசாதாமாக வரப்பட்ட பரிவட்டங்கள் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

பின்னர் அதிகாலை ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று, ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தனித்தோளுக்கினியான்களில் சுவாமிகள் சிறப்பு நாதஸ்வரம் மற்றும் மேளத்துடன் திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது.

தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன், தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வெ.பொன்னுப்பாண்டியன், கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் வி.டி.முத்துராஜ், கூட்டுறவு நகர வங்கியின் தலைவரும், தொகுதி செயலாளருமான எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினரும், அ.தி.முக. மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஏ.மீராதனலட்சுமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேர் நான்கு ரத வீதிகளின் வழியே வந்து இரண்டரை மணி நேரத்தில் நிலை அடைந்தது.

தேரோட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களின் ஆண்டாள் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் பல்வேறு இன்னிசைக் கச்சேரிகள், நாட்டிய நிகழ்சிகள், சொற்பொழிவுகள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் சுவாமிகள் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் விரிவாக செய்திருந்தார்.

தேரோட்டத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது. அரசு போக்குவரத்துக் கழகம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 5 டி.எஸ்.பி.கள் தலைமையில் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →