ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம்: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீஆண்டாள் கோவில் தேரோட்டம்: 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக புதன்கிழமை காலை முதல் மாலை வரை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருப்பூர் தொழிலதிபர் ரா.பிரேம்சந்தர் கல்பஜா சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை, தமிழக கூடுதல் காவல் துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன் தொடங்கி வைக்க, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீஆண்டாள் சன்னதியில் இந்த அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன், சுதர்ஸன் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.