ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருட்டு
ஆலங்குடி கண்ணகி தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராஜாராம் (30).இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில்
ஆலங்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை,வெள்ளி பொருட்களை புதன்கிழமை இரவு திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
ஆலங்குடி கண்ணகி தெரு விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ராஜாராம் (30).இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு புதன்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை,2 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.இதையடுத்து ராஜாராம் அளித்த புகாரையடுத்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
இவரது வீட்டருகேயுள்ள ஆசிரியர் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு இதேபோல பூட்டை உடைத்து நகை,பணம்,மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தொடரும் திருட்டுச் சம்பவங்கள் ஆலங்குடி பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.