வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளம் பெண்ணை வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய கணவரை வாலிபர் புதன்கிழமை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளம் பெண்ணை வரதட்சிணை கேட்டு துன்புறுத்திய கணவரை வாலிபர் புதன்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம், ஆனையூர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மகள் ராஜராஜேஸ்வரி (21). இவரும் வத்திராயிருப்பு, தெற்கு அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் கவுதம் (25) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருணம் செய்துகொண்டனர். அப்போது நான்கரை பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரமும் வரதட்சிணையாகக் கொடுத்துள்ளனர்.
ஆனால், திருமணமான பின்னர் சரியாக வேலைக்குச் செல்லாமல் ராஜராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சரக்கு ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் கேட்டு ராஜராஜேஸ்வரியை கவுதம் கொடுமைப்படுத்தியுள்ளார்.
மேலும், அவரது தந்தை முருகன், தாய் கமலாதேவி ஆகியோரும் ராஜராஜேஸ்வரியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜராஜேஸ்வரி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து கவுதமை கைது செய்தனர்.