முகப்பு
தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகி சுமூக பேச்சுவார்த்தை : வன்முறையில் உயிரிழந்தவரின் உடல் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில் வெள்ளிக்கிழமை மாலை பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் கோரிக்கைகள்

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகி சுமூக பேச்சுவார்த்தை : வன்முறையில் உயிரிழந்தவரின் உடல் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில் வெள்ளிக்கிழமை மாலை பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் கோரிக்கைகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டியில் வியாழக்கிழமை மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னையில் வெள்ளிக்கிழமை மாலை பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால், சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் சென்றுவிட்டனர்.

அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ் வெள்ளிக்கிழமை இரவு 6 மணி நேரம் மேற்கொண்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து சடலத்தை வாங்கிச் செல்ல உறவினர்கள் முன்வந்தனர்.

அதன்படி சனிக்கிழமை காலை பாலமுருகனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கூமாப்பட்டி, ராமசாமிபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (49). இவர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார்.  வியாழக்கிழமை இதே இடத்தைச் சேர்ந்த செ.தங்கப்பாண்டி, செ.சந்திரபோஸ் ஆகியோர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பகுதியில் இருந்த நாகராஜ் என்பவரின் ஆட்டோவில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு, அதில் வாந்தி எடுத்துள்ளார்கள். இதனை ராமச்சந்திரன் கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவரும் அவரை அடித்துள்ளார்கள். இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் செய்யச் சென்றுள்ளார். இதில் ஒருவரை போலீஸார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளார்கள்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக ஒரு கோஷ்டியினர் அம்பேத்கர் தெரு சுடுகாட்டுப் பாதையில் தகராறில் ஈடுபட்டுள்ளதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்ததின் பேரில், சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன்குமார், பஞ்சபாண்டியன் காவலர் மருதுபாண்டி, ரவி ஆகியோர் பாதுகாப்பு அளிப்பதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அக்கும்பல் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டு, சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் ஏற்பட்ட மோதலில் ராமச்சந்திரனின் மகன் பாலமுருகன் உயிரிழந்தார்.

கலவரம் குறித்து கேள்விப்பட்டு, கூமாப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜா, அம்பேத்கர் தெரு அருகே வாகனத்தில் வந்து கொண்ருந்த போது, அக் கும்பல் ராஜாவை வழிமறித்து அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து இத்துடன் செத்துப் போ என்று கூறி கல், கம்பால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள். மேலும் அரசு வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இச் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் கொடுத்த இரு புகார்கள் உள்ளிட்ட 4 புகார்களின் பேரில் கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை பாலமுருகனின் சடலம் வைக்கப்பட்டிருந்த வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இவர்களது கோரிக்கையை ஏற்று 5 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை நடத்தியது. மேலும் நீதித்தறை நடுவர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாலமுருகன் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தாக்குதல் நடத்திய காவலர்கள் தலித் இல்லாதவர்களாய் இருந்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து சடலத்தை வாங்க மறுத்துச் சென்று விட்டனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 6 மணி நேரம் வத்திராயிருப்பு அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ், பாலமுருகனின் தந்தை ராமச்சந்திரன் மற்றும் குடும்பத்தாரிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். இழப்பீடு வழங்குவதற்கு சட்டத்திற்குட்பட்டு, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கருணை அடிப்படையில் சத்துணவு கூடத்தில் ஏதாவது பணி இருந்தால் பாலமுருகனின் மனைவிக்கு அளிக்க பரிசீலனை செய்யப்படும் என்றும், புகாரில் கூறப்பட்டுள்ள காவலர்களின் மூவர் தலித்கள் என்றும் அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டையடுத்து சனிக்கிழமை சடலத்தை வாங்கிக் கொள்வதாக குடும்பத்தார் உறுதியளித்தனர். இதன் பேரில் சனிக்கிழமை காலை பாலமுருகனின் சடலம் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரில் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து இப் பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →