முகப்பு
தற்போதைய செய்திகள்

இரீடியம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரீடம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் வி.ராமகிருஷ்ணன், வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரீடம் கலந்த கோவில் கலசம் இருப்பதாக கூறி ஏமாற்ற முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.வத்திராயிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் வி.ராமகிருஷ்ணன், வத்திராயிருப்பு-கூமாப்பட்டி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தி சோதனையிட்டார். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களைக் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் காவ்ல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இரீடியம் கலந்த கோவில் கலசம் உள்ளது என்று பொய் வதந்தி பரப்பி, மக்கள் ஏமாற்றி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் கூமாப்பட்டியைச் சேர்ந்த பா.முத்துவேல் (45), புளியங்குடியைச் சேர்ந்த மா.கணேசன், சிவகிரியைச் சேர்ந்த செ.மணி (64), மா.துரைப்பாண்டி (38), கேரளாவைச் சேர்ந்த கி.விஜயகுமார் (42) ஆகிய 5 பேரைக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →