முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஸ்ரீசிவகாமிஅம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.75 செலவில் சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு ரூ.75 செலவில் சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள ஸ்ரீசிவகாமிஅம்மன் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீநடராஜர் தேர் மற்றும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதுற்றது. இதனால் கடந்த 2013 டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின் போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து வருகிற ஆனித்திருமஞ்சன தரிசனத்திற்குள் தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளை தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால், நிதிக்குழுத் தலைவர் பிரதாப்குமார், நிர்வாகிகள் ராமநாதன், ஹேமநாத், ராமலிங்கம் ஆகியோர் தேர்களையும், ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த தேர்கள் புதுப்பிக்க வாங்கப்பட்ட மரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகளை வரவழைத்து ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேரை சீரமைத்து கட்டுமானப்பணி இரவு பகலாக நடைபெற்றது. இதில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் தேர் மட்டும் ரூ.75 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு கட்டுமானப்பணி முடிவுற்றது. ஸ்ரீநடராஜப் பெருமான் தேர் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனிதிருமஞ்சன தரிசனம் முடிவுற்ற பின்னர் ஸ்ரீநடராஜர் பெருமான் தேருக்கு அடுத்த மார்கழி ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பு சீரமைத்து கட்டுமானப் பணிகளை முடிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீசிவகாமிசுந்தரி அம்மன் தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. புதிய தேர் முன்பு பொதுதீட்சிதர்களால் கணபதி ஹோமம் செய்யப்பட்டு, பூசனிக்காய் திருஷ்டி கழிக்கப்பட்டு மகாதீபாராதனைக்கு பின்னர் தேர் நான்கு வீதிகளிலும் வெள்ளோட்டம் விடப்பட்டது.

தேர் வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் எஸ்.ரத்தினசபாபதி தீட்சிதர், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், நிர்வாகிகள் சந்திரசேகரன், ஜோதி குருவாயூரப்பன், முத்துகணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.