முகப்பு
தற்போதைய செய்திகள்

கணவருடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிசரடு பறிப்பு

சிதம்பரம் அருகே சித்தலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் முன்பு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பவளக்கொடி (45).

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

வீட்டில் கணவருடன், படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 மர்மநபர்கள் உள்ளே புகுந்து 7 பவுன் தாலி சரடை பறித்துச் சென்ற துணிகர சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

சிதம்பரம் அருகே சித்தலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் புதிய வீடு கட்டி வருகிறார். வீட்டின் முன்பு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் பவளக்கொடி (45). ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, கணவன், மனைவி இருவரும் புதிதாக கட்டப்பட்டு வரும் கதவு இல்லாத வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் 30 வயது மதிக்கத்தக்க 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, பவளக்கொடியின் கழுத்திலிருந்த 7 பவுன் தாலி மற்றும் குண்டுகள் உள்ளிட்ட செயினை பறித்துக் கொண்டு தலைமறைவாயினர்.

இதுகுறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.                                                                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.