முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் திருட்டை தடுத்த கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

காட்டுமன்னார்கோயில் அரகுகே உள்ள ஆழங்காத்தான் கிராம உதவியாளராக மகாலிங்கம் பணியாற்றுகிறார். தில்லைநாயகபுரம் மணல் குவாரியில் வெள்ளிக்கிழமை இரவு திருட்டுத்தனமாக மணல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:32 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே மணல் குவாரியிலிருந்து திருட்டுத்தனமாக ஏற்றி வந்த டிராக்டரை பிடித்த போது, கிராம உதவியாளர் தாக்கப்பட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

காட்டுமன்னார்கோயில் அரகுகே உள்ள ஆழங்காத்தான் கிராம உதவியாளராக மகாலிங்கம் பணியாற்றுகிறார். தில்லைநாயகபுரம் மணல் குவாரியில் வெள்ளிக்கிழமை இரவு திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடித்தார். அப்போது கிராம உதவியாளர் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜனிடம் தகவல் தெரிவித்துவிட்டு காயமுற்ற மகாலிங்கம் காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்து முறையிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.