முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட  ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட  ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

  ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த  பிப்ரவரி 6 ஆம் தேதி மீனபிடிக்க கடலுக்கு தங்கச்சிமடத்தை சேர்ந்த தேவசகாயம்,ஆரோக்கியதாஸ் ஆகியோர்களின் படகுகளில்  சென்ற நிலன்,கிறிஸ்டோபர்,கெட்சோன்,கிளிண்டன்,ரிகால்டன்,நாகு,மோகன்,நம்புராஜன்,முருகன் ஆகிய 9 மீனவர்களையும் தனுஸ்கோடி,கச்சத்தீவு கடல்பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர்  கைது செய்தனர்.பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து  மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி மார்ச் 13 ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன்படி 9 மீனவர்களையும் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Advertisement

மீனவர்களின் வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்தி கனக ரெத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்னும் ஒரு சில நாள்களில் ராமேசுவரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments