முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டுக்குக் தடை : பாகனேரி தெருக்களில் கருப்புக்கொடி ஏற்றி காளைகளுடன் ஊர்வலம்

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் வீதிகளில் கருப்புக் கொடி கட்டியும், கொம்புகளில் கருப்புத் துணி சுற்றி ஊர்வலம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:15 AM
பகிர்:

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் வீதிகளில் கருப்புக் கொடி கட்டியும், கொம்புகளில் கருப்புத் துணி சுற்றி ஊர்வலம் வந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒனறியத்தில் உள்ளது பாகனேரி. இங்கு  பலர் ஜல்லிக்கட்டுக்கான காளைகளை வளர்த்து வருகின்றனர். உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தின் தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யக் கோரி  பாகனேரியில் செவ்வாய்க்கிழமை வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கிராம வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகளின் கொம்புகளில் கருப்புத் துணியைச் சுற்றி அவற்றை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பேரவையின் மாநில துணைத் தலைவர் செந்தாமரை உடையப்பன் கூறியதாவது:

Advertisement

தமிழர்களின் கலாச்சார விளையாட்டாக இருந்து வருவது ஜல்லிக்கட்டு. இதில் இளைஞர்களின் வலிமையக் காட்டும் வகையில் காளைகளை அடக்குவது என்பது தமிழ் மரபு. இதுவரை நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு ஏற்ற வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொன்மையான விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தும் வகையில் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments