நெல்லையில் ரயில்வே கேட் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் தர்னா
திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி பேரின்பபுரத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3
திருநெல்வேலி அருகே ரயில் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்த பேரின்புரத்தில் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் திடீரென தர்னாவில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொன்னாக்குடி பேரின்பபுரத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்க முயன்றபோது, கார் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் உயிரிழந்தனர். பேரின்பபுரம் 113 ஆம் எண் ஆளில்லாத கிராசிங்கில் ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே ரயில் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்ததால், அங்கு உடனடியாக ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பேரின்பபுரம் ரயில் கிராசிங்கில் திரண்டு திடீரென தர்னாவில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கு ரயில்வே கேட் அமைக்க வேண்டும் வலியுறுத்தினர்.